search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 3,500 புத்தகங்கள் நன்கொடை வழங்கினார்
    X

    பஞ்சாப் பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 3,500 புத்தகங்கள் நன்கொடை வழங்கினார்

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னை பட்டதாரியாக்கிய பஞ்சாப் பல்கலைக்கழகத்திற்கு 3,500 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கினார். #manmohansingh #panjabuniversity
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றவர். மேலும், அப்பல்கலைக்கழத்திலேயே பொருளாதார துறையில் பேராசிரியராக பணிபுரிந்தார். 32 வயதில் பணியில் சேர்ந்த இவர் 1960-ம் ஆண்டு வரை மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வந்தார். அதன் பின் பேராசிரியர் பதவியிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.

    இந்நிலையில், மன்மோகன் சிங் தன்னை பட்டதாரியாக்கிய பஞ்சாப் பல்கலைக்கழகத்திற்கு தன் வீட்டில் உள்ள புத்தக தொகுப்பிலிருந்து 3,500 புத்தகங்களை நன்கொடையாக வழங்க விரும்பினார். இது தொடர்பாக மன்மோகன் சிங் பஞ்சாப் பல்கலைக்கழகத்திற்கு இன்று நேரில் சென்று தனது விருப்பத்தை தெரிவித்தார். அவரது விரும்பத்தை பஞ்சாப் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது.

    விரைவில் டெல்லியிலிருந்து மன்மோகன் சிங் அளிக்கும் புத்தகங்கள், நினைவுச்சின்னங்கள், புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் பஞ்சாப் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வருவதற்காக ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்யும். புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பல்கலைகழக வளாகத்தில் உள்ள குரு டெக் பகதூர் பவான் கட்டிடத்தில் வைக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. #manmohansingh #panjabuniversity

    Next Story
    ×