search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அட்டை வழங்கப்படும்
    X

    திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அட்டை வழங்கப்படும்

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரண பக்தர்களுக்கு திருமலை, திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரண பக்தர்களுக்கு திருமலையில் 2017-ம் ஆண்டு பரிசோதனை அடிப்படையில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட் கார்டு) வழங்கப்பட்டன.

    அந்தத் திட்டம் வெற்றி பெற்றதால், அந்தத் திட்டத்தை நிரந்தரம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டையை பக்தர்களுக்கு நிரந்தரமாக வழங்குவது குறித்து தேவஸ்தான என்ஜினீயர்கள், தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை- திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரண பக்தர்களுக்கு திருமலை, திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளது. அதற்காக திருமலையில் 32 கவுண்ட்டர்களும், திருப்பதியில் 55 கவுண்ட்டர்களும் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை இந்த மாதம் (மார்ச்) 2-வது வாரத்தில் இருந்து பக்தர்களுக்கு வழங்குவது நிரந்தரம் செய்யப்பட உள்ளது. ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆர்ஜித சேவை டிக்கெட் கட்டணத்தை குறைக்கபரிசீலனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×