search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குண்டர்கள் தாக்கி இறந்த தலித் மாணவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி என முதல் மந்திரி அறிவிப்பு
    X

    குண்டர்கள் தாக்கி இறந்த தலித் மாணவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி என முதல் மந்திரி அறிவிப்பு

    உ.பி.யில் குண்டர்களால் தாக்கப்பட்டு இறந்த தலித் மாணவர் திலீப் சரோஜ் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
    லக்னோ:

    உ.பி.யில் குண்டர்களால் தாக்கப்பட்டு இறந்த தலித் மாணவர் திலீப் சரோஜ் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் உள்ள கெர்னல்கஞ்ச் பகுதியில்ன் கலிகா ஓட்டலில் சட்ட கல்லூரி மாணவர் திலீப் சரோஜ் சாப்பிடச் சென்றார். அப்போது அங்கு வந்த சில குண்டர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த சரோஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திலீப் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, அலகாபாத்தில் குண்டர்களால் தாக்கப்பட்டு இறந்த தலித் மாணவர் திலீப் சரோஜ் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், உ.பி.யில் குண்டர்களால் தாக்கப்பட்டு இறந்த தலித் மாணவர் திலீப் சரோஜ் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிதி அளிக்கப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×