search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த ரப்பர் பொம்மையை விழுங்கிய 4 வயது சிறுவன் பரிதாப பலி
    X

    சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த ரப்பர் பொம்மையை விழுங்கிய 4 வயது சிறுவன் பரிதாப பலி

    ஆந்திராவில் சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த ரப்பர் பொம்மையை விழுங்கிய சிறுவன் மரணமடைந்த சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஐதராபாத்:

    ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கொடவாரி மாவட்டத்தில் உள்ள எழுரி நகரைச் சேர்ந்தவர் லக்‌ஷ்மணா ராய். இவர் நேற்று தனது நான்கு வயது மகனான நிரிக்‌ஷனுக்கு 'டைமண்ட் ரிங்ஸ்' என்ற சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி கொடுத்துள்ளார். அதனை உண்ட சில நிமிடங்களில் சிறுவன் மயக்கமடைந்தான்.



    லக்‌ஷ்மணா உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சிறுவனை சோதித்து பார்த்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுவன் தொண்டையில் ரப்பர் பொம்மை சிக்கி உள்ளது. அதனால் ஏற்பட்ட மூச்சு அடைப்பே சிறுவன் மரணத்திற்கு காரணம் என கூறினர்.


    சிறுவன் உண்ட சிப்ஸ் பாக்கெட்டில் பரிசாக ரப்பர் பொம்மை இருந்துள்ளது. இது அந்த நிறுவனத்தால் பரிசாக பாக்கெட்டில் போடப்பட்டுள்ளது. அதனால் சிப்ஸ் நிறுவனம் மற்றும் அதனை விற்ற கடையின் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவு வந்தவுடன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு விசாரணையில் உணவு ஆய்வாளர்களின் உதவியை காவல்துறை நாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த ரப்பர் பொம்மையை விழுங்கிய சிறுவன் மரணமடைந்த சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×