search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை வெளியுறவு துறை மந்திரி பிரதமர் மோடியுடன் சந்திப்பு
    X

    இலங்கை வெளியுறவு துறை மந்திரி பிரதமர் மோடியுடன் சந்திப்பு

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை வெளியுறவு துறை மந்திரியான திலக் மரப்பனா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை வெளியுறவு துறை மந்திரியான திலக் மரப்பனா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

    இலங்கை வெளியுறவு துறை மந்திரி திலக் மரப்பனா இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் டெல்லிக்கு வந்த அவருக்கு இந்திய வெளியுறவு துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தனது மனைவி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் டெல்லி வந்துள்ளார்.

    இந்நிலையில், இலங்கை வெளியுறவு துறை மந்திரி திலக் மரப்பனா பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    முன்னதாக, அவர் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த மாதம் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை சென்றிருந்த போது, மரப்பனாவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இந்தியா வந்துள்ள மரப்பனா சுஷ்மாவை சந்தித்து பேசியுள்ளார். இருதரப்பு உறவுகளுடன் மீனவர் பிரச்னை குறித்து இருவரும் பேசினர். அதை தொடர்ந்து, சுஷ்மா சுவராஜ் இலங்கை மந்திரி திலக் மரப்பனாவுடன் மதிய உணவருந்தினார்.

    கடந்த மாதம் வெளியுறவு துறை மந்திரியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட திலக் மரப்பனாவின் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×