search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நட்சத்திர பேச்சாளர் யார்-யார்?: தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு
    X

    நட்சத்திர பேச்சாளர் யார்-யார்?: தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு

    தமிழகம் முழுவதும் பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரசாரம் செய்ய இருக்கிற நட்சத்திர பேச்சாளர் யார்-யார்? என்பதற்கான பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. #LSPolls #EC
    சென்னை:

    தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ளப்போகும் நட்சத்திர பேச்சாளர்களின் பெயர்கள் வருமாறு:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அன்வர் ராஜா, வைத்திலிங்கம், விஜிலா சத்யானந்த், அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வைகைச் செல்வன், தமிழ்மகன் உசேன், நிர்மலா பெரியசாமி, சுந்தரராஜன் ஆகிய 40 பேர் அ.தி.மு.க. கட்சிக்கு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தில் பிரசாரம் மேற்கொள்வார்கள்.

    தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் அப்சல், தமிழ்மதி உள்பட 40 பேர் நட்சத்திர அந்தஸ்தில் பிரசாரம் மேற்கொள்வார்கள்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அந்த கட்சியின் நிர்வாகிகள் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் கரத், பிருந்தா கரத், ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 40 பேர்; தே.மு.தி.க.வில் அதன் நிறுவனர் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, எல்.கே.சுதீஷ் உள்பட 40 பேர்; ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திருப்பூர் துரைசாமி, மல்லை சத்யா உள்பட 20 பேர் நட்சத்திர அந்தஸ்தில் பிரசாரம் மேற்கொள்வார்கள்.



    இந்தக் கட்சிகள் தவிர அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், புதிய தமிழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், கொங்கு மக்கள் தேசியக் கட்சி, மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் நட்சத்திர அந்தஸ்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #EC
    Next Story
    ×