search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஒரு வாரமாக தினமும் இரவு, பகல் பாராமல் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

    கோடை வெயிலின் தாக்கத்தாலும் அக்னி நட்சத்திர வெயிலின் கொடுமையாலும் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் மின்தடையால் மேலும் அவதிக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்தாலும் குறைந்த மின் அழுத்தமாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் கண்டு கொள்வது கிடையாது.

    தற்போது முஸ்லிம்கள் நோன்பு காலத்தை கடைபிடித்து இரவில் சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் இரவு நேரத்தில் மின் தடை ஏற்படுத்தி வருவது வேதனையை அளித்துள்ளது.

    பெண்கள் தனியாக செல்லவும், அதிகாலையில் நோன்பு வைக்கவும் சிரமப்படுகின்றனர்.

    இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்தடையால் கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் கொசுக் கடியிலும், புழுக்கம் காரணமாகவும் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.

    மின்தடை ஏற்பட காரணம் தெரியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மின் தடைக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து சீரான மின் வினியோகம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×