search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேல்மலையனூரில் நேற்று பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    மேல்மலையனூரில் நேற்று பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதை படத்தில் காணலாம்.

    மூங்கில்துறைபட்டில் சூறை காற்றுடன் பலத்த மழை- 100 எக்கர் கரும்புகள் சேதம்

    விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, மேல்மலையனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
    மேல்மலையனூர்:

    காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, மேல்மலையனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த நிலையில் மேல்மலையனூர் பகுதியில் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. மாலை 4 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. தொடர்ந்து 4.30 மணிக்கு திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழை மாலை 5.15 மணி வரை நீடித்தது. அதன்பிறகு குளிர்ந்த காற்று வீசியது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் தேங்கியது. இந்த மழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்தது. வெயிலின் தாக்கத்தால் அவதியடைந்த மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.

    சங்கராபுரம் தாலுகா மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கடுவனூர், பாக்கம், புதூர், கானாங்காடு, வடபொன்பரப்பி, லக்கிநாயக்கன்பட்டி, ராவத்தநல்லூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதற்காக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கரும்பு பயிர் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். தற்போது அந்த கரும்புகள் நல்ல முறையில் செழித்து வளர்ந்து காணப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக நேற்று முன்தினம் மாலை சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு ஆகிய பகுதிக்குட்பட்ட கிராமங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    அப்போது காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் புதூர், கடுவனூர், பாக்கம், ராவத்தநல்லூர் ஆகிய கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×