search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலியார்பேட்டையில் ஆன்-லைன் மூலம் லாட்டரி விற்றவர் கைது
    X

    முதலியார்பேட்டையில் ஆன்-லைன் மூலம் லாட்டரி விற்றவர் கைது

    முதலியார்பேட்டையில் ஆன்-லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரில் ஒரு வீட்டில் ஆன்-லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மற்றும் போலீசார் ஜெயமூர்த்தி ராஜா நகர் செந்தமிழ் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வீட்டில் இருந்தவர் லேப்-டாப் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்றதை போலீசார் கண்டனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பிள்ளைத்தோட்டம் பள்ளத்தெருவை சேர்ந்த டோனி (வயது 40) என்பதும், பிரபல லாட்டரி சீட்டு வியாபாரியான இவர் ஆன்-லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதற்காகவே ஜெயமூர்த்தி ராஜா நகரில் வீட்டை சொந்தமாக வாங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் இவரை மங்காத்தா டோனி என்றே பலரும் அழைத்து வந்துள்ளனர்.

    இதையடுத்து டோனியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லேப்-டாப், செல்போன் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை பணம் ரூ.19,600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×