search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் பிரச்சினை: வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
    X

    குடிநீர் பிரச்சினை: வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்

    குடிநீர் பிரச்சினையை தீர்க்காததை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி கொண்டப்பநாயனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட நாகமங்கலம், கொட்டாவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கயில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் இந்த கிராமத்திற்கு உட்பட்ட ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு போனதால் குடிக்க தண்ணீர் இன்றி அவதிப்படுவதோடு மட்டுமின்றி கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இன்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் வறண்டு போன இந்த ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிக்க தண்ணீர் இன்றி அவதிப்படும் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்காததை கண்டித்து கிராம மக்கள் நேற்று கால்நடைகளின் கொம்புகளிலும், வீடுகளிலும் கருப்பு கொடி களை கட்டி வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் ஒரு குடம் தண்ணீர் எடுத்து வர பல கிலோ மீட்டர் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது, ஆடு, மாடுகளை காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. ஆகையால் கொண்டப்பநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

    வறண்ட ஏரிக்கு தண்ணீர் வரும் வகையில் படேதலாவ் ஏரிகால்வாய் திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், இந்த பகுதியில் அதிகரித்து வரும் கிரானைட் தொழிற்சாலைகளை அகற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×