search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அருகே ஓடும் கன்டெய்னர் லாரியில் திடீர் தீ- 28 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
    X

    கரூர் அருகே ஓடும் கன்டெய்னர் லாரியில் திடீர் தீ- 28 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்

    கரூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியில் திடீரென தீப்பிடித்ததில், 28 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
    வெள்ளியணை:

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து பேட்டரியால் இயங்கும் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை உத்தரபிரதேச மாநிலம் பகேட்டியாபூர் பகுதியை சேர்ந்த விஜய்நாராயணன் (வயது 41) ஓட்டினார்.

    அந்த லாரி நேற்று காலை சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், கரூர் அருகே உள்ள ஆட்டயாம்பரப்பு பகுதியில் சென்றபோது, கன்டெய்னர் லாரியில் இருந்து புகை வருவதை டிரைவர் பார்த்து, லாரியை சாலையோரம் நிறுத்தினார்.

    இதில் கன்டெய்னரில் உள்ளே இருந்த மோட்டார் சைக்கிள்கள் தீ பிடித்து எரிந்து கொண்டிருப்பதால் தான் புகை வருவது தெரிய வந்தது. இதையடுத்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும், தாந்தோணிமலை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு படைவீரர்கள், கன்டெய்னர் லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் திண்டுக்கல் மற்றும் பொள்ளாச்சிக்கு கொண்டு சென்ற 28 புதிய மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தாந்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் கன்டெய்னர் லாரியில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×