என் மலர்
நீங்கள் தேடியது "motorcycle burned"
ஆலந்தூர்:
நங்கநல்லூர் 30-வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம் (25). இவர் ஆதம்பாக்கம் நியூ காலனி மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்தார். அதிகாலை 3 மணியளவில் இவருக்கும் மதுபார் மேலாளர் கார்த்திக் (29). என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட மோதலில் அங்கு நிறுத்திருந்த மேலாளர் கார்த்திக்கின் மோட்டார் சைக்கிளை ஸ்ரீராம் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தார். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் ஸ்ரீராமை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிக பணம் வசூலித்ததால் ஏற்பட்ட தகராறில் மோட்டார் சைக்கிளை எரித்ததாக அவர் கூறினார்.
இப்பகுதியில் இந்த பார் இரவு முழுவதும் செயல்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அங்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னிமாரியம்மன் கோவில் வீதியில் அரவிந்தன், ஜெகதீஸ், சசிகுமார், அபுதாகிர் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று இரவு வீட்டு முன்பு தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றனர். இன்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து விட்டு சென்றனர். மோட்டார் சைக்கிள்கள் தீ பிடித்து எரிவதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் 4 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமானது. இது குறித்து 4 பேரும் குன்னூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.






