என் மலர்
செய்திகள்

ஆதம்பாக்கத்தில் மதுபார் மேலாளரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு- வாலிபர் கைது
ஆதம்பாக்கத்தில் அதிக பணம் வசூலித்ததால் மதுபார் மேலாளரின் மோட்டார் சைக்கிளை எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர்:
நங்கநல்லூர் 30-வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம் (25). இவர் ஆதம்பாக்கம் நியூ காலனி மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்தார். அதிகாலை 3 மணியளவில் இவருக்கும் மதுபார் மேலாளர் கார்த்திக் (29). என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட மோதலில் அங்கு நிறுத்திருந்த மேலாளர் கார்த்திக்கின் மோட்டார் சைக்கிளை ஸ்ரீராம் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தார். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் ஸ்ரீராமை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிக பணம் வசூலித்ததால் ஏற்பட்ட தகராறில் மோட்டார் சைக்கிளை எரித்ததாக அவர் கூறினார்.
இப்பகுதியில் இந்த பார் இரவு முழுவதும் செயல்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அங்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
Next Story