search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சி அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிவைத்த காட்சி
    X
    செஞ்சி அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிவைத்த காட்சி

    வாக்குசாவடி அமைக்காததை கண்டித்து செஞ்சி அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய கிராம மக்கள்

    செஞ்சி அருகே வாக்குச்சாவடி அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செஞ்சி:

    செஞ்சி அருகே காமகரம் கிராமம் உள்ளது. இங்கு 950-க்கு மேற்பட்ட வாக்களார்கள் உள்ளனர். ஆனால் இந்த கிராம மக்கள் பக்கத்து ஊரான சேபேட்டை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டும். எனவே தங்கள் ஊருக்கு தனிவாக்குசாவடி அமைக்க வேண்டும் அவ்வாறு அமைக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவித்தனர்.

    இதையொட்டி செஞ்சி தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் காமகரம் கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.

    தகவல் அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேசினார்கள். கருப்பு கொடியை அகற்றுமாறு கேட்டுகொண்டனர்.

    அதன்படி கிராம மக்கள் தங்களது வீடுகளில் ஏற்றிய கருப்பு கொடிகளை அகற்றினர். தங்களது பிரச்சனைகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுப்போம் அதன்பிறகும் தங்களது கிராமத்தில் தனி வாக்கு சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×