search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village People's Struggle"

    • கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது.
    • நிலம் உள்ளவர்கள் அவர்களது நிலத்திலே அடக்கம் செய்து விடுகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி வட்டம் வேகாக்கொல்லை மதுரா பாவைக்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது தந்தை தந்தை வெள்ளக்கண்ணு நேற்று மதியம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இந்த கிராமத்தில் உடல் நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு செல்ல வழி இல்லாத காரணத்தினால் நல்லடக்கம் செய்வதில் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது பற்றி தகவல் வந்ததும் பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேல், காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன்,துணை தாசில்தார் சேகர், வருவாய் ஆய்வாளர் பிரியா லதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுபேச்சுவார்த்தை நடத்தினர்.

    விரைவில் மயானத்திற்கு செல்ல நிரந்தரமான பாதையை அமைத்து தரப்படும் எனஅதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து கைப்பாடை மூலமாகபட்டா நிலத்தின் வழியாக பிணத்தை தூக்கி சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் ஊரில் யாராவது இறந்தால் இது போன்ற பிரச்சினை ஏற்படுகிறது. நிலம் உள்ளவர்கள் அவர்களது நிலத்திலே அடக்கம் செய்துவிடு கின்றனர். நிலம், வீடு, வாசல் இல்லாதவர்கள் இறந்தால் அவர்களின் பாடு திண்டாட்டம் ஆகிறது. எனவே நிரந்தர தீர்வுக்கு அரசு உதவ வேண்டும் என்றனர். 

    • சுருக்குமடி வலை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் 30 மீனவ கிராம மக்கள் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இவர்களை கண்காணித்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களின் படகு மற்றும் மீன்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், தைக்கால்தோணி துறை, சாமியார்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மீனவர்கள் விசைப்படகு, கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடித்து வருகிறார்கள். இதற்கிடையில் கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் மீன் வளம் குறைகிறது என்று கூறி மாவட்ட நிர்வாகம் சுருக்குமடி வலைக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் ஒரு சில மீனவ கிராம மக்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துகின்றனர். இவர்களை கண்காணித்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களின் படகு மற்றும் மீன்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இதனிடையே கடலூர் அருகே சாமியார்பேட்டை பகுதியில் 30 கிராம மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனை கண்டித்து கடலூர், மயிலாடுதுறை மாவட்ட புதுவைமாநில மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த கூடாது, இரட்டை மடி வலையை உபயோகிக்கூடாது. அதிக குதிரை திறன் கொண்ட என்ஜினை பயன்படுத்த கூடாது என தெரிவித்தனர். அதன்படி இன்று மீனவர்கள் சாமியார்பேட்டை கடற்கரையில் கருப்பு ெகாடியுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி தளம் வெறிச்சோடியது.

    செஞ்சி அருகே வாக்குச்சாவடி அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செஞ்சி:

    செஞ்சி அருகே காமகரம் கிராமம் உள்ளது. இங்கு 950-க்கு மேற்பட்ட வாக்களார்கள் உள்ளனர். ஆனால் இந்த கிராம மக்கள் பக்கத்து ஊரான சேபேட்டை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டும். எனவே தங்கள் ஊருக்கு தனிவாக்குசாவடி அமைக்க வேண்டும் அவ்வாறு அமைக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவித்தனர்.

    இதையொட்டி செஞ்சி தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் காமகரம் கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.

    தகவல் அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேசினார்கள். கருப்பு கொடியை அகற்றுமாறு கேட்டுகொண்டனர்.

    அதன்படி கிராம மக்கள் தங்களது வீடுகளில் ஏற்றிய கருப்பு கொடிகளை அகற்றினர். தங்களது பிரச்சனைகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுப்போம் அதன்பிறகும் தங்களது கிராமத்தில் தனி வாக்கு சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர். #tamilnews
    ×