search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 15 பவுன் நகை, பணம் திருட்டு - தொழிலாளியின் மகன் போலீசில் புகார்
    X

    மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 15 பவுன் நகை, பணம் திருட்டு - தொழிலாளியின் மகன் போலீசில் புகார்

    ஒரத்தநாடு அருகே மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தொழிலாளியின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே பாச்சூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகன் பாலமுருகன்(வயது28). பி.இ. படித்துள்ளார். மகள் கனிமொழி.

    கனிமொழிக்கு திருமண ஏற்பாடுகளை பிச்சை முத்து செய்து வந்தார். அதற்காக 15 பவுன் நகைகள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை வீட்டில் பீரோவில் வைத்திருந்தனர். பிச்சைமுத்து, அவரது மனைவி கூலி வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டி சாவியை வாசல் நிலைப் படியில் வைத்துவிட்டு செல்வது வழக்கமாம்.

    இந்நிலையில் கடந்த 14-ந்தேதி பாலமுருகன் வெளியூர் சென்றிருந்ததால் பிச்சைமுத்து வீட்டை பூட்டி வழக்கம்போல் சாவியை நிலைப் படியில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் மாலையில் வீடு திரும்பினர். நேற்று காலை பீரோவில் இருந்த நகைகளை சரிபார்க்க திறந்தபோது 15 பவுன் நகைகளையும், ரூ.10 ஆயிரத்தையும் காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.

    அப்போதுதான் வீட்டு நிலைப்படியில் வைத்திருந்த சாவியை யாரோ எடுத்து திறந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலமுருகன் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×