search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    56 பேருக்கு சித்திரை விருதுகள்: முதலமைச்சர் பழனிசாமி 19-ந்தேதி வழங்குகிறார்
    X

    56 பேருக்கு சித்திரை விருதுகள்: முதலமைச்சர் பழனிசாமி 19-ந்தேதி வழங்குகிறார்

    மறைமலையடிகளார் விருது, சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    மறைமலையடிகளார் விருது, சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்களை முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    தமிழ்த்தாய் விருது புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது புலவர் மி. காசுமானுக்கும், உ.வே.சா. விருது நடன. காசிநாதனுக்கும், கம்பர் விருது முருகேசனுக்கும், சொல்லின் செல்வர் விருது ஆவடிக் குமாருக்கும், ஜி.யு.போப் விருது சந்திரசேகரன் நாயருக்கும், உமறுப் புலவர் விருது பேராசிரியர் நசீமாபானுக்கும், இளங்கோ வடிகள் விருது சிலம்பொலி சு.செல்லப்பனுக்கும், அம்மா இலக்கிய விருது உலகநாயகி பழனிக்கும், சிங்காரவேலர் விருது பா.வீரமணிக்கும் வழங்கப்படுகிறது.

    2017-ம் ஆண்டிற்கான முதல்- அமைச்சர் கணினித் தமிழ் விருது மதன்கார்க்கிக்கு வழங்கப்படவுள்ளது.

    மேற்கண்ட விருதுகளில் தமிழ்த்தாய் விருது பெறும் புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கு ரூபாய் 5 லட்சம் விருதுத் தொகையுடன் பாராட்டுக் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மற்ற விருதுகள் பெறுவோருக்கு 1 லட்சம் ரூபாய் விருதுத் தொகையும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் பொன்னாடை மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும்.

    2018-ம் ஆண்டிற்கான சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகள் யூமாவாசுகி, லட்சுமண ராமசாமி, மு.சீனிவாசன், ஜி.குப்புசாமி, மருத்துவர் சே.அக்பர்கவுசர், ராஜலட்சுமி சீனிவாசன், செ.செந்தில்குமார் (எ) ஸ்ரீ கிரிதாரிதாஸ், முனைவர் பழனி.அரங்கசாமி, எஸ். சங்கர நாராயணன், நிலா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன.

    சிறந்தமொழி பெயர்ப்பாளர் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் விருதுத் தொகை, தகுதியுரை மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.

    2018-ம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருது டென்மார்க் நாட்டைச்சேர்ந்த ஜீவகுமாரனுக்கும், இலக்கண விருது பிரான்சு நாட்டைச்சேர்ந்த பாரதிதாசனுக்கும், மொழியியல் விருது பிரான்சு நாட்டைச்சேர்ந்த சச்சிதானந்தத்துக்கும் வழங்கப்படவுள்ளன.

    விருதுகளை பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் விருதுத் தொகையும் தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.

    மாவட்டங்களில் தமிழ்ப் பணி ஆற்றி அருந்தொண்டாற்றி வரும் 32 மாவட்டங்களின் தமிழ்ச் செம்மல் விருது பெறுவோர் பட்டியல் யு.எஸ்.எஸ்ஆர். கோ. நடராசன் (சென்னை), முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் (திருவள்ளூர்), முனைவர் இதயகீதம் ராமானுசம் (காஞ்சீபுரம்), சிவராஜி (வேலூர்), கவிரிஷி மகேஷ் (கிருஷ்ணகிரி), சம்பந்தம் (திருவண்ணாமலை), மதிவாணன் (விழுப்புரம்), சஞ்சீவிராயர் (கடலூர்), ஆறுமுகம் (பெரம்பலூர்), ஆறுமுகம் (அரியலூர்), கணபதி (சேலம்), பொன்னுரங்கன் (தருமபுரி), தியாக ராசன் (நாமக்கல்), திருமூர்த்தி (ஈரோடு), கவிமாமணி கருவை வேணு (கரூர்), முனைவர் நடராசன் (கோவை), தண்டபாணி சிவம் (திருப்பூர்), கந்தசாமி (நீலகிரி), கோவிந்தசாமி (திருச்சி), முத்து சீனிவாசன் (புதுக்கோட்டை), முனைவர்

    குமரப்பன் (சிவகங்கை), உடையார் கோயில்குணா (தஞ்சாவூர்), சக்தி மைந்தன் (திருவாரூர்), மணிமேகலை (நாகப்பட்டினம்), சுப்பையா (ராமநாதபுரம்), இலக்குமண சுவாமி (மதுரை), வதிலைபிரபா (திண்டுக்கல்), குப்புசாமி (தேனி), முனைவர் அழகர் (விருதுநகர்), கவிஞர் ராசேந்திரன் (திருநெல்வேலி), ஜான் கணேஷ் (தூத்துக்குடி), ஆபத்துக்காத்தபிள்ளை (கன்னியாகுமரி) தமிழ்ச் செம்மல் விருது பெறும் ஒவ்வொரு விருதாளர்களுக்கும் 25 ஆயிரம் ரூபாய் விருதுத் தொகையுடன் தகுதியுரை வழங்கியும் மற்றும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படும்..

    மேற்கண்ட 56 விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந்தேதி தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார். #TNCM #Edappadipalaniswami
    Next Story
    ×