search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் 23, 24-ந் தேதிகளில் ஊர்க்காவல் படை காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
    X

    ராமநாதபுரத்தில் 23, 24-ந் தேதிகளில் ஊர்க்காவல் படை காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

    ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள 63 பணியிடங்களுக்கு வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 55 ஆண்கள், 8 பெண்கள் என 63 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (15-ந் தேதி) முதல் 21-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், சீதக்காதி- சேதுபதி விளையாட்டு அரங்கம் பின்புறமுள்ள மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும்.

    வருகிற 23,24-ந் தேதிகளில் காலை 9 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்காவல் படை வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் 18 வயதுக்கு மேல் 50 வயதிற்குள் நல்ல உடல் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும். விளையாட்டு வீரர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    10-ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 21-ந் தேதி மாலை 5 மணிக்கு முன், மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஆதார் அட்டை, ரே‌ஷன் கார்டு. மாற்று சான்றிதழ், இரண்டு போட்டோ (பாஸ்போர்ட் சைஸ்)மதிப்பெண் பட்டியல் அசல் சான்று தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். ஊர்க்காவல் படை வீரராக தேர்வு செய்யப்படுவோருக்கு காவல்துறை மூலம் 45 நாள் பயிற்சி அளிக்கப்படும். மாதத்திற்கு 5 நாள் மட்டும் பணி வழங்கப்படும். பணிபுரிந்த நாளுக்கு 560 வீதம் 5 நாட்களுக்கு மாதம் ரூ.2800 ஊதியம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×