search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் இல்லாதோர் பெயர் சேர்க்க வாய்ப்பு
    X

    வாக்காளர் பட்டியலில் இல்லாதோர் பெயர் சேர்க்க வாய்ப்பு

    வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதோர், நீக்கல், திருத்தம் விண்ணப்பங்கள் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் வரை பெறப்பட்டு அறிவிப்புக்கு பிறகு 11-வது நாளில் துணை வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும்.
    புதுச்சேரி:

    புதுவை துணை தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 31-ந்தேதி வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

    இதற்கு ஏதுவாக வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த பணி மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பட்டியலில் சேர 1.1.2019 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் தொகுதிக்குள் இடமாற்றம் ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் வரை பெறப்பட்டு அறிவிப்புக்கு பிறகு 11-வது நாளில் துணை வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும்.

    அதன்பிறகு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மனு செய்வதற்கான இறுதிநாள் வரை வாக்காளர் திருத்த பணி நடைபெறும். மறுநாள் துணை வாக்காளர் பட்டியல் 2 மட்டும் வெளியிடப்படும்.

    பொதுமக்கள் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்டிட தங்கள் வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி வாக்காளர் பதிவு அதிகாரி, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரம் பெற விரும்புவோர் 1950 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×