search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா
    X

    பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா

    மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    விருதுநகர்:

    விருதுநகர் ஸ்ரீவித்யா கல்விக்குழும நிர்வாகம் மற்றும் அனைத்து குழும கல்லூரி, பள்ளிகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா, விவேகானந்தர் பிறந்த நாள் விழா மற்றும் கலை பண்பாட்டு விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீவித்யா மெட்ரிக் மற்றும் பப்ளிக் பள்ளி, கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் கலைக்கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். இதனையொட்டி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கல்விக்குழும நிறுவன தலைவர் திருவேங்கட ராமானுஜதாஸ், துணைத்தலைவர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகத்தினர், கல்லூரி, பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.



    சாத்தூர் மேட்டமலை ஸ்ரீவத்சா கல்வியியல் மற்றும் பல்தொழில்நுட்ப கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா, கல்லூரி தலைவர் சுப்பாராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    சிவகாசி அனிதா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவுக்கு பள்ளி தலைவர் ஆறுமுகச்சாமி வடிவேல், பள்ளி தாளாளர் வசந்த் விகாஷ் ஆறுமுகச்சாமி மற்றும் சுஜிதா விகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல் நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவுக்கு தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர் அரவிந்த் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சாத்தூர் மேட்டமலை பி.எஸ்.என்.எல். கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழாவையொட்டி உறியடித்தல், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் நாட்டுப்புற கலைகள் முன்னேற்ற பாதையில் செல்கின்றனவா?, அழிவு பாதையில் செல்கின்றனவா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றது.

    தாயில்பட்டி அருகே செவல்பட்டி எஸ்.பி. மாடர்ன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா, தாளாளர் பார்வதி சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பள்ளி இயக்குனர் ஜெயபாரதி முன்னிலை வகித்தார். விழாவையொட்டி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அருப்புக்கோட்டை சந்திரா நேஷனல் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், கல்வி குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் மற்றும் சசிரேகா, பள்ளி செயலாளர் சரவணன், சங்கீதா சரவணன், ஹேமாபார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் விழாவையொட்டி பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பட்டிமன்றம் நடந்தது.

    ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் தாளாளர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி சித்ரா தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி முதன்மை நிர்வாக அதிகாரி அரவிந்த், நிர்வாக அதிகாரி அமுதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×