search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சி அருகே போலி நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ.1½ கோடி மோசடி- ஊழியரிடம் போலீசார் விசாரணை
    X

    செஞ்சி அருகே போலி நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ.1½ கோடி மோசடி- ஊழியரிடம் போலீசார் விசாரணை

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே போலி நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ.1½ கோடி மோசடி தொடர்பாக ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது திருவம்பட்டு. இங்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று உள்ளது.

    இந்த வங்கியில் புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் (வயது 39) என்பவர் நகை மதிப்பீட்டாளராக கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

    இந்த வங்கியில் செஞ்சி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் வங்கியில் வைக்கப்பட்டுள்ள நகைகளை சோதனை செய்து பார்த்தபோது அதில் பல நகைகள் போலி என்பது தெரிய வந்தது. யாரோ வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ கோடி பண மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.

    இது தொடர்பாக வங்கி மேலாளர் செஞ்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வங்கி ஊழியர் ஜெகநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×