search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் கியாஸ் ஏஜென்சி ஊழியரிடம் ரூ.6 லட்சம் அபேஸ்
    X

    விருதுநகரில் கியாஸ் ஏஜென்சி ஊழியரிடம் ரூ.6 லட்சம் அபேஸ்

    கியாஸ் ஏஜென்சி ஊழியரிடம் ரூ.6 லட்சம் அபேஸ் செய்யப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    விருதுநகர்:

    விருதுநகர் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). இவர் சிவகாசி சாலையில் உள்ள கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு வசூல் பணம் ரூ.6 லட்சத்தை எடுத்துக் கொண்டு ராமச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    வீட்டுக்கு சென்றதும் மோட்டார் சைக்கிளின் பெட்டியை திறந்தபோது, அதில் வைத்திருந்த பணப்பை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், விருதுநகர் பஜார் போலீசில் புகார் செய்தார். நிறுவனத்தில் இருந்து கிளம்பிய நான், சேதப்பட்டு திடல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி சில பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பியதாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் விருதுநகர் மருதநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நாகஜோதி (37). இவர், தனது மாமியார் வீடு சென்று ரூ.50 ஆயிரம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் தான் வைத்திருந்த பணப்பையை பறித்துச் சென்று விட்டதாக ஆமத்தூர் போலீசில் நாகஜோதி புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×