search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேட்டவலம் பஸ் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
    X

    வேட்டவலம் பஸ் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

    வேட்டவலம் பேரூராட்சி சார்பில், பஸ் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    வேட்டவலம்:

    வேட்டவலம் பேரூராட்சி சார்பில், பஸ் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) எம்.சுகந்தி தலைமையில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சுமித்ரா, சித்த மருத்துவர் சுதேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் டெங்கு நோய் பரவாமல் தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களில் நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும், குடிநீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன், பேரூராட்சி வரித்தண்டலர் பூபாலன், துப்புரவு மேற்பார்வையாளர் வெற்றிவேலன், அலுவலக உதவியாளர்கள் வெங்கடேசன், சந்திரமோகன், முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×