search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் ரூ.1 1/2 கோடி நகை மோசடி செய்த வாலிபர் கைது
    X

    மதுரையில் ரூ.1 1/2 கோடி நகை மோசடி செய்த வாலிபர் கைது

    மதுரையில் ரூ.1 1/2 கோடி நகை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை விளாச்சேரி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ரிச்சர்டு லாரன்ஸ். தங்க நகை மொத்த வியாபாரி.

    இவர் மதுரை சொக்கப்பநாயக்கன் தெருவில் நகை கடை வைத்திருக்கும் கணேசன் என்ற விக்னேசிடம் (வயது 38) ரூ.13 1/2 லட்சம் மதிப்பிலான 480 கிராம் தங்க நகைகளை கொடுத்து விற்றுத்தருமாறு கூறினார்.

    நகைகளை பெற்றுக் கொண்ட கணேசன் அதன் பின்னர் மாயமானார். இது குறித்து ரிச்சர்டு லாரன்ஸ் மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நகையுடன் மாயமான கணேசனை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியதில், 13 பேரிடம் இதே போல ரூ.1 1/2 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்க நகைகளை வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் சந்தான முனியாண்டி. இவர் பொன்மேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்தார். ஒழுங்கீனம் காரணமாக அந்த நிறுவனத்தில் இருந்து கடந்த மே மாதம் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் சந்தான முனியாண்டி, நிதி நிறுவன வாடிக்கையாளர் ஒருவரின் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1.32 லட்சம் மதிப்பில் 2 செல்போன்களை வாங்கினார்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் நிதி நிறுவனம் பணத்தை செலுத்துமாறு கேட்டபோது, தான் செல்போன் வாங்க வில்லை என்று மறுத்தார்.

    அப்போது தான் வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு மூலம் சந்தான முனியாண்டி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    இது குறித்து தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளர் கேசவன், எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×