search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    30 ஆண்டுகளுக்கு பின்பு கவுசிகா ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியது
    X

    30 ஆண்டுகளுக்கு பின்பு கவுசிகா ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியது

    திருப்பூரில் பலத்த மழை பெய்ததால் 30 ஆண்டுகளுக்கு பிறகு கவுசிகா ஆற்றில் நீர் வர தொடங்கியது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு திருப்பூர், அவினாசி, பல்லடம், தாராபுரம், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    திருப்பூரில் இரவு 10.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது.

    மழை காரணமாக 30 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பூர் வஞ்சிப்பாளையத்தில் உள்ள கவுசிகா ஆற்றில் நீர் வர தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- திருப்பூர் - 15, அவினாசி -43.40, பல்லடம் - 48, தாராபுரம் -9, மூலனூர்- 8.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அருவியில் தொடர்ந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் இன்று 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. கோவையில் நேற்று இரவு மழை பெய்தது. இது போல் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மழை பெய்தது.
    Next Story
    ×