search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
    X

    ரேஷன் பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

    ரேஷன் பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி அங்கிருந்த பாலத்தில் மோதி பக்கவாட்டு பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    திருப்பத்தூர்:

    விருதுநகரிலிருந்து ரேஷன்கடை வினியோகத்திற்காக பாமாயில் பாக்கெட்டுகள் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் ஏற்றிய ஒரு லாரி கும்பகோணத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மாரிமுத்து (வயது 29) என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் லாரி திருப்பத்தூரை அடுத்த நெடுமரம் பாலத்தின் அருகே வந்த போது, திடீரென பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.

    அதை டிரைவர் நிறுத்த முயன்றார். ஆனால் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறிய லாரி, நிலைதடுமாறி அங்கிருந்த பாலத்தில் மோதி பக்கவாட்டு பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. அதில் லாரியில் இருந்த பாமாயில் எண்ணெய் பாக்கெட்டுகள் கீழே சிதறி விழுந்து சேதமடைந்ததில், எண்ணெய் கொட்டியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காயமின்றி தப்பினார். 
    Next Story
    ×