search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் பொது சுகாதாரத்துறைக்கு பாதிப்பு இருக்கக்கூடாது: ஜி.கே.வாசன்
    X

    பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் பொது சுகாதாரத்துறைக்கு பாதிப்பு இருக்கக்கூடாது: ஜி.கே.வாசன்

    பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் பொது சுகாதாரத்துறைக்கு பாதிப்பு இருக்கக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். #GKVasan #AyushmanBharat
    சென்னை :

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மருத்துவ காப்பீட்டுத்திட்டம் பொது சுகாதாரத்துறையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கவேண்டும். மேலும் இந்த திட்டமானது பன்னாட்டு மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களின் லாபத்தை நோக்கமாக கொண்டதாக இருக்கக்கூடாது.

    இந்த திட்டமானது அனைத்து தரப்பு மக்களின் மருத்துவ செலவுக்கு பேருதவியாக இருக்குமா என்ற சந்தேகத்திற்கு இடமே அளிக்கக்கூடாது. இத்திட்டத்தின் கீழ் வரும் சிகிச்சை முறைகளை தனியார் நிறுவனங்கள் முழுமையாக, சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பொது சுகாதாரத்துறைக்கு பாதிப்பு இருக்கக்கூடாது.

    மத்திய அரசு, அரசு மருத்துவமனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், அரசு மருத்துவமனைகளில் கிடைக்காத சிகிச்சைகளுக்கு காப்பீட்டை வழங்க வேண்டும், மத்திய அரசே நிதியுதவி செய்ய வேண்டும். மாநில உரிமைகள், பொது சுகாதாரத்துறை, இந்திய மருத்துவக்கழகம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் போன்ற அனைத்திலும் அதிக அக்கறை கொண்ட நோக்கத்தோடு பிரதமரின் மருத்துவ காப்பீடுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #GKVasan #AyushmanBharat 
    Next Story
    ×