search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டில் மரம் விழுந்து காயம் அடைந்த 3 பெண்களும் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காட்சி
    X
    வீட்டில் மரம் விழுந்து காயம் அடைந்த 3 பெண்களும் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காட்சி

    கொடுமுடி அருகே காற்றுடன் மழை- மரம் முறிந்து 2 வீடுகளில் விழுந்ததில் 3 பெண்கள் படுகாயம்

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காற்றுடன் பெய்த மழையால் மரம் முறிந்து வீடுகளில் விழுந்ததில் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு 2-வது நாளாக பல இடங்களில் இடி-மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்தது.

    இதே போல் கொடுமுடி அருகேயும் மழை கொட்டியது. இரவு காற்றும் வீசியதால் கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி பஸ் நிறுத்தம் அருகே ரோட்டோரம் உள்ள ஒரு மரம் திடீரென முறிந்து அங்கிருந்த 2 குடிசை வீடுகள் மீது விழுந்தது.

    இதில் வேணி (வயது 45), ஜகினா (25), பூங்கொடி (50) ஆகிய 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

    இரவு மழை பெய்ய தொடங்கியதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் கதவை பூட்டி கொண்டு படுத்து விட்டனர். இரவு 9.50 மணி அளவில் காற்றில் மரம் முறிந்து இந்த 3 பெண்கள் காயம் அடைந்தனர்.

    உடனடியாக 3 பெண்களும் மீட்கப்பட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ரோட்டோரத்தில் உள்ள வீடுகளில் மரம் விழுந்ததால் ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் இரவு 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுபாதையில் விடப்பட்டன. #tamilnews

    Next Story
    ×