search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயரழுத்த மின்சாரம் பாதிப்பு - மின்சார பொருட்கள் வெடித்து சிதறுவதால் பொதுமக்கள் அவதி
    X

    உயரழுத்த மின்சாரம் பாதிப்பு - மின்சார பொருட்கள் வெடித்து சிதறுவதால் பொதுமக்கள் அவதி

    பொன்னேரியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் பழுதாவதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த இலவம்பேடு இருளர் காலனி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஏரிக்கரை ஓரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

    ஏரிகள் என்பதால் பாம்பு மற்றும் வி‌ஷ பூச்சிகளால் அவதிப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, மின் விசிறி, செட்டாப் பாக்ஸ் போன்ற பொருட்கள் பழுதாகி விடுகின்றன.

    அப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளதாகவும் இதை பலமுறை மின்சார வாரியத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இதனால் இரவு நேரங்களில் ஏரிக்கரையில் உள்ள தாங்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தாங்கள் இருளர் இன மக்கள் என்பதால் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். உடனே இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×