search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுமதிஇன்றி செயல்படும் மதுபான பார்களால் அரசுக்கு வருவாய் இழப்பு
    X

    அனுமதிஇன்றி செயல்படும் மதுபான பார்களால் அரசுக்கு வருவாய் இழப்பு

    தேனி மாவட்டத்தில் அனுமதிஇன்றி செயல்படும் மதுபான பார்களால் அரசுக்கு பல கோடிக்கான தொகை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் கடந்த சில ஆண்டு வரை 100-க்கும் மேற்பட்ட சில்லரை மதுபான விற்பனை கடைகள் செயல்பட்டு வந்தது.

    தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் இயங்க கோர்ட்டு விதித்த கட்டுபாடுகளால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டது. இதன் பின்னர் தேசிய நெடுஞ்சாலைகளில் சில சாலைகள் மாநில நெடுஞ்சாலையாக வகை மாறியதால் அடைக்கப்பட்ட மதுபான கடைகள் படிப்படியாக திறக்கப்பட்டு தற்போது தேனி மாவட்டத்தில் சுமார் 80 மதுபான கடைகள் வரை செயல்பட்டு வருகிறது.

    இந்த மதுபான கடைகளில் மதுபான கூடங்கள் நடத்த முன்பு ஏலத்தொகை என்ற முறை மாறி, தற்போது கடையின் விற்பனை தொகையில் 2.4 சதவீதம் பார் நடத்துவதற்கான தொகை என நிர்ணயம் செயல்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மதுபான கடைகளுக்கு பார் கிடையாது.

    ஆனால் இதற்கு முன்பு மதுபான பார் நடத்தி வந்தவர்களில் சிலர் அதே இடத்தில் அதிகாரிகளை சரிகட்டி அனுமதியின்றி மதுபான பார்களை நடத்தி வருகின்றனர். இதனால் பல கோடிக்கான தொகை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    எனவே எந்தெந்த மதுபான பார்களுக்கு அனுமதி உள்ளது என்பதை அதிரடி சோதனையின் மூலம் ஆய்வு மேற்கொண்டு அனுமதியற்ற மதுபான பார்களை காலி செய்யவும் அல்லது முறைப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். #tamilnews
    Next Story
    ×