search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி மாலை அணிவிக்கிறார்
    X

    பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி மாலை அணிவிக்கிறார்

    தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். #MKStalin #DMK
    சென்னை:

    சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி காலை 8 மணிக்கு அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரை முருகன் மற்றும் கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

    எனவே முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்- இந்நாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுபினர்கள், தலைமைக்கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்டக்கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin #DMK

    Next Story
    ×