search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்ச்சல் பாதிப்பு இருந்தால் சிகிச்சைக்கு வரவேண்டும்- அரசு ஆஸ்பத்திரி டீன் பேட்டி
    X

    காய்ச்சல் பாதிப்பு இருந்தால் சிகிச்சைக்கு வரவேண்டும்- அரசு ஆஸ்பத்திரி டீன் பேட்டி

    கோவையில் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனே சிகிச்சைக்கு வர வேண்டும் என அரசு மருத்துவமனை டீன் கூறியுள்ளார்.
    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:-

    எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சையை டாக்டர்கள் அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கேரள மாநிலத்தில் எலி காய்ச்சல் பரவி வருவதால், கேரளாவை ஒட்டி உள்ள கோவையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு இருப்பவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதிப்புடன் வரும் பொதுமக்கள், அலட்சியமாக இருக்காமல் , சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் . எலிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து , பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×