search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முற்றுகை போராட்டம் எதிரொலி: லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம்
    X

    முற்றுகை போராட்டம் எதிரொலி: லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம்

    பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தினமும் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    கண்டமனூர்:

    ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜதானி ஊராட்சியில் ஜக்கம்மாள்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டாகவே சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்தும், தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனர்.

    அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து போக செய்தனர். இந்தநிலையில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.5 லட்சத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது. அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எபி, முத்துப்பாண்டி ஆகியோர் ஆழ்துளை கிணறு அமைக்க இடம் தேர்வு செய்து வருகின்றனர். அதுவரை பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தினமும் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தண்ணீரை குடங்களில் பிடித்து செல்கின்றனர்
    Next Story
    ×