search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீட்டில் போலி மது தயாரித்த 2 பேர் கைது
    X

    முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீட்டில் போலி மது தயாரித்த 2 பேர் கைது

    நீலகிரி அருகே முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீட்டில் போலி மது தயாரித்த 2 பேரை கைது செய்த போலீசார் 1500 லிட்டர் மதுவை மீட்டு கொட்டி அழித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெலாக்கோட்டை அருகே உள்ள பிதர்காடு உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் அச்சு (வயது 53). இவருக்கு சொந்தமான வீட்டை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பெருந்தல்மன்னா பகுதியை சேர்ந்த முகமது பாவா, சலீம், சச்சிதானந்தன் ஆகியோருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

    இங்கு போலி மதுபானம் தயாரித்து விற்பனைக்கு அனுப்புவதாக அம்பலமூலா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பந்தலூர் சப்-இன்ஸ்பெக்டர் இளவேந்தன், ஏட்டு தினேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். வீட்டில் யாரும் இல்லாததால் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு சோதனை செய்தபோது 3 பேரல்களில் 1500 லிட்டர் போலி மதுபானம் இருந்தது. இது தவிர மது தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், காலி டாஸ்மாக் மதுபாட்டில்கள் ஆகியவைகள் இருந்தன. அவைகளை போலீசார் பறிமுதல் செய்து மதுவிலக்கு அமலாக்க போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவற்றை மீட்டு கொட்டி அழித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி மது தயாரித்த முகமது பாவா (50) ஓட்டல் உரிமையாளர் செல்வராஜ் (50) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சச்சிதானந்தம், சலீம் மற்றும் செல்வராஜின் கார் டிரைவர் ரிச்சர்ட் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுபானம் தயாரித்து அவற்றை எங்கெல்லாம் அனுப்பினர்? டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் உடந்தையாக இருந்தனார? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். # tamilnews
    Next Story
    ×