search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா நிறுவன அதிபரிடம் சிபிஐ 12 மணி நேரம் விசாரணை
    X

    குட்கா நிறுவன அதிபரிடம் சிபிஐ 12 மணி நேரம் விசாரணை

    சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் குட்கா நிறுவன அதிபர் மாதவராவிடம் 12 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. #GutkhaScam
    சென்னை:

    குட்கா போன்ற பொருட்களால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக தமிழகத்தில் அவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி தங்குதடையின்றி குட்கா அனைத்து இடங்களிலும் விற்கப்பட்டு வருகிறது.

    இது தொர்பாக நடந்த விசாரணையில் இந்த சம்பவத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

    குட்கா வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார் என்றும், அவருக்கு குடோன் அமைக்க அனுமதி அளித்த மற்றும் அந்த குடோனை பரிசோதனை செய்த அதிகாரிகள் யார்? என்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் குட்கா நிறுவன அதிபர் மாதவராவிடம் 12 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

    குட்கா ஊழல் தொடர்பாக குட்கா நிறுவன அதிபர் மாதவராவிடம் சென்னை சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஊழலின் போது பணியாற்றிய அதிகாரிகள் பட்டியல் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஊழலில் தொடர்புடைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு
    செய்துள்ளனர். #GutkhaScam
    Next Story
    ×