search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நல்லூர் துணை மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது
    X

    நல்லூர் துணை மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது

    நல்லூர் துணை மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது.
    கந்தம்பாளையம்:

    நல்லூர் துணை மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது.

    இதுபற்றிய விவரம் வருமாறு:-

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி தாலுகா நல்லூரில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து கந்தம்பாளையம், நல்லூர், சித்தம்பூண்டி, பெருமாபட்டி, மணியனூர், கோலாரம், வசந்தபுரம் மற்றும் பல ஊர்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது டிரான்ஸ்பார்மரின் டேங்க் வெடித்து அதில் இருந்த ஆயில் வெளியேறி தீப்பிடித்தது. அந்த தீ தரைப்பகுதியில் புற்களில் பற்றிப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் இரவு முழுவதும் அந்த பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. நேற்று காலையில் மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து டிரான்ஸ்பார்மரை சீரமைத்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து சுற்றுப்புற பகுதிகளுக்கு மீண்டும் மின்வினியோகம் செய்யப்பட்டது. 
    Next Story
    ×