search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Substation"

    • காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படும்
    • பொதுமக்கள் தொடர்புகொண்டும், சரியான பதில் தரவில்லையென கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் பிள்ளைத் தெருவாசல் பகுதியில், 12 மணி நேரத்திற்கு மேல் மின் தூண்டிப்பு ஏற்பட்டதால், அங்குள்ள துணை மின் நிலையம் முன்பு, பொதுமக்கள் நள்ளிரவில் திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்காலை அடுத்த பிள்ளைத்தெருவாசல் பகுதியில் உள்ள துணை மின் நிலையததில், சில மின் பராமரிப்பு பணி காரணமாக, நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவித்த நிலையில், இரவு 11 மணியாகியும், மின் இணைப்பு தராததால், அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளகினர்.

    தொடர்ந்து, பலமுறை மின்துறைக்கு பொதுமக்கள் தொடர்புகொண்டும், சரியான பதில் தரவில்லையென கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பிள்ளைத்தெருவாசல் துணை மின் நிலையத்தின் முன்பு, திடீரென கூடி, தங்களின் வாக னங்களை சாலையில் நிறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிறிது நேரத்தில் பழுது நீக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட் டதை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினர்.

    • நன்னிலம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • ஆதலையூர், பாக்கம் கோட்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்மினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    நன்னிலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி,

    குலக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசாகருப்பூர், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவலைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்கா கோட்டூர்,

    ஆணைகுப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூளை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாக்குடி, வீதி விடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்மினியோகம் இருக்காது.

    இந்த தகவலை திருவாரூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபா தெரிவித்துள்ளார்.

    • பனியன் தொழில், விசைத்தறி, நூற்பாலை தொழில்களும் அதிகம் இருக்கிறது.
    • ஏற்கனவே இயங்கும் 7 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் விவசாயமும், தொழில்வளமும், வேலை வாய்ப்பும் மிகுந்த மாவட்டமாக இருக்கிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக பனியன் தொழில், விசைத்தறி, நூற்பாலை தொழில்களும் அதிகம் இருக்கிறது.தொழில் வளர்ச்சி காரணமாக திருப்பூர் மாவட்டத்துக்கான மின்தேவையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அவ்வகையில் இம்மாவட்டத்தில் மட்டும் 13 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்து ஆயத்தப் பணியும் துவங்கியுள்ளது.

    அதன்படி காங்கயம் பெரியார் நகரில் ரூ. 1.62 கோடி மதிப்பில், பல்லடம் நாரணாபுரத்தில் 2.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு துணை மின்நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.பல்லடம் - முத்தணம்பாளையம் கிராமம், அமராவதிபாளையம், உகாயனூர் கிராமத்தில் துணை மின்நிலையங்கள் அமைய தலா 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் வடக்கு காளிபாளையம் கிராமம் தாண்டாக்கவுண்டன்பாளையம், நெருப்பெரிச்சல், காவிலிபாளையம், பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட, அணைப்பாளையம், திருப்பூர் வடக்கு தொகுதி, கூலிபாளையத்திலும் துணை மின்நிலையம் அமைய உள்ளது.காங்கயம் மடவிளாகம், கத்தாங்கன்னி, கம்பளியாம்பட்டி பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    பல்லடம் - காங்கயம் ரோடு துணை மின்நிலையம், விஜயாபுரம் துணை மின்நிலையம், தாராபுரம் - சங்கராண்டாம்பாளையம், சக்திபாளையம் துணை மின்நிலையம் அமைக்க இடம் தேடும் பணி நடந்து வருகிறது.

    காங்கயம் தொகுதி - குறுக்கத்தி, ராசாத்தாவலசு, காடையூர், பல்லடம் - பொங்கலூர், தாராபுரம் தொகுதி- செலாம்பாளையம் துணை மின்நிலையம் அமைக்க அனுமதி பெறப்பட்டு ஆயத்த பணி துவங்கியுள்ளது.

    இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், திருப்பூர், பல்லடம், உடுமலை மின்பகிர்மான வட்டங்களில் 13 இடங்களில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். ஏற்கனவே இயங்கும் 7 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன. மொத்தம், 144 கோடி ரூபாய் மதிப்பில் இப்பணிகள் நிறைவு பெற்றதும் விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்வினியோகம் மேம்படுத்தப்படும் என்றனர்.ன

    • நாளை 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது
    • ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்:

    ராசாத்தாவலசு துணை மின்நிலையம்: ராசாத்தாவலசு, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.

    வெள்ளக்கோவில் துணை மின்நிலையம்: வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா்.நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், சேரன் நகா், காமராஜபுரம்.

    தாசவநாயக்கன்பட்டி துணை மின்நிலையம்: தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளி பாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.

    மேட்டுப்பாளையம் துணை மின்நிலையம்: அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.

    ஊதியூா் துணை மின்நிலையம்: வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம்.

    • ஈச்சங்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஈச்சங்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல்லங்கரை, வேங்கை ராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர், மேல உளுர், கீழ உளுர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிகோட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறக்கூடிய கண்ண ந்தங்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன் குடிக்காடு, தென்னமநாடு, பருத்திக்கோட்டை, பொய்யுண்டார் குடிக்காடு, கோவிலூர், ஆயங்குடி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை ஒரத்தநாடு நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மதுரை திருப்பாலை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரை திருப்பாலை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (13-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்டை ஏற்படும். திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமிநகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், தபால் தந்தி காலனி, பாமாநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், குடிநீர் வடிகால் வாரிய காலனி, சொக்கிகுளம், சண்முகாநகர், விஜய் நகர், கலைநகரின் சில பகுதிகள், மீனாட்சி நகர், இ.பி.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்
    • ஆற்காடு தாழனூரில் விழா நடந்தது

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகரில் புதிய மின்வாரிய அலுவலகத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார்.

    ரூ.2.84 கோடியில் புதிய மின்மாற்றி

    மேல்விஷாரம் மின்வாரியஇளநிலை பொறியாளர் அலுவலகம் புறவழிச்சாலையில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே செயல்பட்டுவந்தது. அந்த அலுவலகத்தை மேல்விஷாரம் அண்ணாசாலை சவுக்கார் அப்துல்காதர் தெருவில் பொதுமக்களின் நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்டது.

    இடமாற்றம் செய்யப்பட்ட மின்வாரிய அலுவலக திறப்பு விழாவிற்கு நகர மன்ற தலைவர் எஸ்.டி.முஹமது அமீன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் சவுக்கார் முன்னா, நகர மன்ற துணை தலைவர் குல்சார் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு இடமாற்றம் செய்யப்பட்ட புதிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    16 மெகா வாட்டாக உயர்த்தம்

    அதேபோல் ஆற்காடு ஒன்றியம் தாழனூர் கிராமத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் ரூ.2.84 கோடி மதிப்பீ்ட்டில் 10 மெகாவாட்டிலிருந்து 16 மெகாவாட் திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றியை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.

    இதன் மூலம் ஆற்காடு நகரம், வேப்பூர், மேல்விஷாரம், நந்தியாலம், தாழனூர், முப்பது வெட்டி, தாஜ்புரா கூராம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தடையில்லா சீரான மின்சாரம் வழங்க முடியும்.

    இந்த விழாவில் ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராமலிங்கம், ஆற்காடு ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணை தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி இயக்குநர் சாந்திபூஷன் இளநிலை பொறியாளர் ஆனந்தன், ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.வி நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மாம்பாடி, புளியம்பட்டி, எல்.எம்.என்.பட்டி பகுதியில் மின்தடை செய்யப்படும்.

    தாராபுரம்:

    மூலனூர் எல்.எம்.என்.பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 29-ந் தேதி (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அன்று காலை 11 மணி முதல் மதியம் 2.00 மணிவரை மூலனூர் எல்.எம்.என். பட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட நந்தப்பாளையம், பாலக்கரை, அக்கரைபாளையம்கோட்டை, மூலனூர், சானார்பாளையம், குருநாதர் கோட்டை, மாம்பாடி, புளியம்பட்டி, எல்.எம்.என்.பட்டி மற்றும் இதுசார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும்.
    • ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ஆர். எஸ். மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன் 2, பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (16-ந் தேதி) நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார் வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே. கே, நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை அமேடு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இதேபோல் ராமநாதபுரம் துணை மின் நிலை யத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி மற்றும் உயர்மின் தொடர் பராமரிப்பு பணி நடை பெறுவதால் எம்.ஜி. ஆர். நகர், எம்.எஸ்.கே. நகர், திருப்புல்லானி, அம்மன் கோவில், தெற்குதரவை, எல். கருங்குளம்,மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், தெற்கு தரவை, பசும்பொன் நகர், கூரியூர், பொக்கனேந்தல், பால்கரை, காட்டூர்னி, பேராவூர், ஏலமனுர், மேல்கோட்டை, மாடக் கோட்டான்,நாகநாதபுரம், இந்திரா நகர், பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.

    நல்லூர் துணை மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது.
    கந்தம்பாளையம்:

    நல்லூர் துணை மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது.

    இதுபற்றிய விவரம் வருமாறு:-

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி தாலுகா நல்லூரில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து கந்தம்பாளையம், நல்லூர், சித்தம்பூண்டி, பெருமாபட்டி, மணியனூர், கோலாரம், வசந்தபுரம் மற்றும் பல ஊர்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது டிரான்ஸ்பார்மரின் டேங்க் வெடித்து அதில் இருந்த ஆயில் வெளியேறி தீப்பிடித்தது. அந்த தீ தரைப்பகுதியில் புற்களில் பற்றிப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் இரவு முழுவதும் அந்த பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. நேற்று காலையில் மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து டிரான்ஸ்பார்மரை சீரமைத்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து சுற்றுப்புற பகுதிகளுக்கு மீண்டும் மின்வினியோகம் செய்யப்பட்டது. 
    ×