search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துணை மின்நிலையத்தில் ரூ.2.84 கோடியில் 16 மெகாவாட் திறன் கொண்ட மின் மாற்றி
    X

    ஆற்காடு தாழனூர் கிராமத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் ரூ.2.84 கோடி மதிப்பீ்ட்டில் 10 மெகாவாட்டிலிருந்து 16 மெகாவாட் திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றியை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

    துணை மின்நிலையத்தில் ரூ.2.84 கோடியில் 16 மெகாவாட் திறன் கொண்ட மின் மாற்றி

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்
    • ஆற்காடு தாழனூரில் விழா நடந்தது

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகரில் புதிய மின்வாரிய அலுவலகத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார்.

    ரூ.2.84 கோடியில் புதிய மின்மாற்றி

    மேல்விஷாரம் மின்வாரியஇளநிலை பொறியாளர் அலுவலகம் புறவழிச்சாலையில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே செயல்பட்டுவந்தது. அந்த அலுவலகத்தை மேல்விஷாரம் அண்ணாசாலை சவுக்கார் அப்துல்காதர் தெருவில் பொதுமக்களின் நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்டது.

    இடமாற்றம் செய்யப்பட்ட மின்வாரிய அலுவலக திறப்பு விழாவிற்கு நகர மன்ற தலைவர் எஸ்.டி.முஹமது அமீன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் சவுக்கார் முன்னா, நகர மன்ற துணை தலைவர் குல்சார் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு இடமாற்றம் செய்யப்பட்ட புதிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    16 மெகா வாட்டாக உயர்த்தம்

    அதேபோல் ஆற்காடு ஒன்றியம் தாழனூர் கிராமத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் ரூ.2.84 கோடி மதிப்பீ்ட்டில் 10 மெகாவாட்டிலிருந்து 16 மெகாவாட் திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றியை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.

    இதன் மூலம் ஆற்காடு நகரம், வேப்பூர், மேல்விஷாரம், நந்தியாலம், தாழனூர், முப்பது வெட்டி, தாஜ்புரா கூராம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தடையில்லா சீரான மின்சாரம் வழங்க முடியும்.

    இந்த விழாவில் ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராமலிங்கம், ஆற்காடு ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணை தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி இயக்குநர் சாந்திபூஷன் இளநிலை பொறியாளர் ஆனந்தன், ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.வி நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×