search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி மீது கார் மோதி விபத்து -  சென்னை பர்னீச்சர் கடை உரிமையாளர் பலி
    X

    லாரி மீது கார் மோதி விபத்து - சென்னை பர்னீச்சர் கடை உரிமையாளர் பலி

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னை பர்னீச்சர் கடை உரிமையாளர் பலியானார்.
    மயிலம்:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது அஸ்ரத் (வயது 45). சென்னை பெரம்பூரில் பர்னீச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி நிலோபர் நிஷா(35). இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது அஸ்ரத் தனது மனைவியுடன் நெல்லைக்கு சென்றார்.

    அங்கு பக்ரீத் பண்டிகையை கொண்டாடி விட்டு, நேற்று முன்தினம் முகமது அஸ்ரத் தனது மனைவி நிலோபர் நிஷா, அண்ணன் அப்துல் ரசாக் (48), அவரது மனைவி பாத்திமா(38) ஆகியோருடன் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜாவித்(29) என்பவர் ஓட்டினார்.

    அந்த கார் நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கேணிப்பட்டு என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற டேங்கர் லாரியின் பின்பக்கம் கார் மோதியது. இதில் டிரைவர் ஜாவித் காயமின்றி உயிர் தப்பினார். முகமது அஸ்ரத், நிலோபர் நிஷா, அப்துல் ரசாக், பாத்திமா ஆகியோர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி முகமது அஸ்ரத் உயிரிழந்தார். மற்ற 3 பேரும் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
    Next Story
    ×