search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இண்டூர் அருகே அடிபட்டு கிடந்த மான்- வனத்துறையினர் காட்டில் விட்டனர்
    X

    இண்டூர் அருகே அடிபட்டு கிடந்த மான்- வனத்துறையினர் காட்டில் விட்டனர்

    தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே காலில் அடிபட்டு கிடந்த மானை வனத்துறையினர் சிகிச்சை அளித்து காட்டில் கொண்டு விட்டனர்.
    இண்டூர்:

    தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பாரப்பட்டி, தொப்பூர் ஆகிய வனப்பகுதிகளில் மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உலாவி வருகின்றன. வனப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இன்றி ஏரி மற்றும் குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி தண்ணீர் மற்றும் இரையை தேடி நகருக்குள் புகுந்து விடுவது வழக்கம் தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பேடரஅள்ளி கிராமத்தில் இன்று காலில் அடிப்பட்டு காயமடைந்த நிலையில் மான் ஒன்று மயங்கி கிடந்தது.

    இதனை அப்பகுதியில் இருந்த நாய்கள் ஒன்று திரண்டு வந்து குரைத்தது. சத்தம் கேட்டு வெளியே வந்த அந்த பகுதி மக்கள் நாய்களை விரட்டி விட்டனர். இதுகுறித்து உடனே அவர்கள் இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து மானை மீட்டு பாப்பாரப்பட்டி அரசு கால்நடை மருத்துவ மனைக்கு மானை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அடிப்பட்ட மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அங்கு வந்த வனசரக அலுவலர் சுப்பிரமணி மானை மீட்டு மொரப்பூர்- பாப்பாரப்பட்டி இடையே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
    Next Story
    ×