search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழைக்கு ஒதுங்கி நின்ற தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய மேலும் ஒருவர் கைது
    X

    மழைக்கு ஒதுங்கி நின்ற தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய மேலும் ஒருவர் கைது

    புதுவையில் மழைக்கு ஒதுங்கி நின்ற போது தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    பாகூர் புதுநகரை சேர்ந்தவர் ஜெயபிரசாத் (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 16-ந்தேதி மாலை புதுவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    பின்னர் நிகழ்ச்சி முடிந்து அண்ணா சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒதுங்கி நின்றார்.

    அப்போது குடிபோதையில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களுக்குள்ளேயே தகராறு செய்து இடித்து தள்ளிக் கொண்டனர்.

    அப்போது அவர்களில் ஒருவர் ஜெயபிரசாத் மீது விழுந்தார். இதனை ஜெயபிரசாத் தட்டி கேட்டார். அப்போது அவர்கள் 4 பேரும் ஒன்று சேர்ந்து அங்கு கிடந்த கற்களை எடுத்து ஜெயபிரசாத்தை தாக்கி விட்டு தப்பினர்.

    இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி, போலீஸ் ஏட்டு ஜெய்கணேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கண்டக்டர் தோட்டத்தை சேர்ந்த கலையரசன் (23), கோவிந்தசாலையை சேர்ந்தவர்கள் சாமிக்கண்ணு (30), பிரான்சிஸ் ரெமோ (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவரை தாக்கிய கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த பூனை மணியை (30) தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று உருளையன்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த பூனை மணியை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×