search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருங்கல்பாளையம் ஆற்றங்கரையில் மேலும் 10 வீடுகளில் வெள்ளம் புகுந்தது
    X

    கருங்கல்பாளையம் ஆற்றங்கரையில் மேலும் 10 வீடுகளில் வெள்ளம் புகுந்தது

    மேட்டூர் அணையில் இருந்தும் பவானி சாகர் அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கருங்கல் பாளையம் காவிரி ஆற்றங்கரையில் 10 வீடுகளில் இன்று வெள்ளம் நீர் புகுந்துள்ளது.
    ஈரோடு:

    மேட்டூர் அணையில் இருந்தும் பவானிசாகர் அணையில் இருந்தும் மொத்தம் 2.40 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சத்தியமங்கலம், பவானி, கொடுமுடி போன்ற ஊர்களில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ஈரோடு மாநகர பகுதியான பெரிய அக்ரஹாரம், வைரா பாளையம், வெண்டிபாளையம், கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை போன்ற பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பெரிய அக்ரகாரம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் நீரில் மூழ்கியுள்ளன. அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் நீர் புகுந்துள்ளது. வைராபாளையம், வெண்டி பாளையத்தில் உள்ள குப்பை கிடங்கில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    வைராபாளையத்தில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் காவிரி ஆற்று நீர் புகுந்துள்ளது. கருங்கல் பாளையம் காவிரி ஆற்றங்கரையில் 10 வீடுகளில் இன்று வெள்ளம் நீர் புகுந்துள்ளது.

    15 குடும்பங்கள் இன்று 2-வது நாளாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கருங்கல்பாளையம் போலீசார் ஆற்று பகுதிக்கு மக்கள் நுழைய விடாமல் தடுப்பு அரண் அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

    கருங்கல்பாளையம் பழைய காவிரி ஆற்றுப்பாலத்தில் இன்று 2-வது நாளாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது புதுப்பாலம் வழியாகவே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பலர் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியை பார்க்க அதிக அளவு கூடி இருந்தனர். #tamilnews
    Next Story
    ×