search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவகல்லூரி மாணவிகள் விடுதியில் புகுந்த திருடர்கள் - ஒருவர் பிடிபட்டார்
    X

    மருத்துவகல்லூரி மாணவிகள் விடுதியில் புகுந்த திருடர்கள் - ஒருவர் பிடிபட்டார்

    தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மாணவிகள் விடுதியில் தொடர்ந்து கொள்ளையடித்து வந்த திருடன் பிடிப்பட்டான்.
    தருமபுரி:

    தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வெளியூரில் இருந்து வருவதால் அங்குள்ள மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி உள்ளது.

    அந்த விடுதியில் மாணவ, மாணவிகள் பயிற்சி டாக்டர்கள் என தனி தனியாக தங்கி இருக் கின்றனர். இந்த விடுதியில் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக லேப்டாப், விலையுர்ந்த செல் போன், பணம் போன்ற பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    அந்த விடுதி மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து தகவல் கொடுத்தனர். இதனால் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இன்று காலை கொள்ளையர்கள் 3 பேர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையின் பின் பக்கமாக ஏறி விழுந்து 4 வது மாடிக்கு ஏறினர். விடுதியில் மாணவிகள் மட்டுமே இருந்தனர்.

    அந்த கொள்ளையர்களின் ஒருவன் மட்டும் மாணவிகள் விடுதியின் மாடிப்படி வழியாக வந்து அறையில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தார்.

    ஒரு அறையில் மாணவிகள் இல்லாததை கண்டு அறைக்குள் புகுந்து லேப்டாப், செல்போன் என்று விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்த போது அடுத்த அறையில் இருந்த மாணவிகள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

    இந்த கூச்சல் சத்தம் கேட்டு மருத்துவமனையின் காவலாளிகள் வந்து அந்த கொள்ளையனை சுற்றி வலைத்து பிடித்தனர்.

    பின்னர் இது குறித்து மருத்துவமனையில் உள்ள புறக £வல் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். அவர்கள் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளையனை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் தருமபுரி ஜீட்டாண்ட அள்ளியை அடுத்த ஜோகிர் கொட்டாய் பகுதியை சேர்ந்த மாதேஷ் (வயது25) என்பது தெரிவந்தது. இவர் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளது. இவருடன் வந்தவர்கள் கோவையை சேர்ந்தவர்கள். இந்த மருத்துவக்கல்லூரி விடுதியில் தொடர்ந்து லேப்டாப், செல்போன் போன்றவைகளை நான் தான் கொள்ளை அடித்தேன் என்று கூறினான்.
    Next Story
    ×