search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்- 4 பேர் கைது
    X

    கோவில்பட்டியில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்- 4 பேர் கைது

    கோவில்பட்டியில் மணல் கடத்திய 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, 4 டிரைவர்களையும் கைது செய்தனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் உத்தரவின்பேரில், கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆற்றுமணல் லோடு ஏற்றி வந்த 4 லாரிகளை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.

    அப்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரியில் இருந்து ஆற்றுமணலை எடுத்து, அந்த மாவட்டத்துக்கு உள்ளேயே லாரிகளில் கொண்டு செல்ல அனுமதி பெற்று விட்டு, முறைகேடாக ஆற்றுமணலை நெல்லை மாவட்டத்துக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. எனவே 4 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, கோவில்பட்டி போலீஸ் மைதானத்தில் நிறுத்தினர்.

    இதுதொடர்பாக லாரிகளின் டிரைவர்களான நெல்லை அருகே கீழப்பாட்டத்தைச் சேர்ந்த வடிவேல் (வயது 31), செல்லத்துரை (37), கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடியைச் சேர்ந்த ரவி (43), முதுமலைகொழுந்துபுரத்தைச் சேர்ந்த உய்க்காட்டான் (39) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×