search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவரத்தில் மெட்ரோ ரெயிலுக்கு வீடுகளை கையகப்படுத்த எதிர்ப்பு- பொதுமக்கள் போராட்டம்
    X

    மாதவரத்தில் மெட்ரோ ரெயிலுக்கு வீடுகளை கையகப்படுத்த எதிர்ப்பு- பொதுமக்கள் போராட்டம்

    மாதவரத்தில் மெட்ரோ ரெயிலுக்காக வீடுகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மாதவரம்:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் 3, 4 மற்றும் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    இதில் 3-வது வழித்தடம் மாதவரம் முதல் சிறுசேரி வரையும், 5-வது வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் அமைக்கப்படுகிறது.

    இதற்காக மாதவரம் வட்டம் அசிஸ்நகரில் 3 மற்றும் 5-வது வழித்தடம் ஆகியவற்றுக்கு பணிமனை அமைப்பதற்ககு அங்கு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலம், குடியிருப்பு கட்டிடங்கள், பொது இடங்களை கையகப்படுத்தும் சட்ட அறிவிப்பை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

    நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து அசஸ்நகர் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் மாதவரம் மண்டல அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
    Next Story
    ×