search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாபாரியிடம் ரூ. 10 லட்சம் மோசடி - கோவையை சேர்ந்த 5 பேர் கைது
    X

    வியாபாரியிடம் ரூ. 10 லட்சம் மோசடி - கோவையை சேர்ந்த 5 பேர் கைது

    வியாபாரியிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்த கோவையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோவை:

    ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரயாஸ். ஆன் லைன் மூலம் அரிசி, புளி என மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரை கோவையை சேர்ந்த சிலர் ஆன் லைனில் தொடர்பு கொண்டு தங்களுக்கு மொத்தமாக புளி அனுப்பி வைக்கும் படியும் அதற்கான பணத்தை செலுத்தி விடுவதாகவும் கூறினர்.

    இதனை நம்பி ரயாஸ் சுமார் 10 டன் புளியை வேன் மூலம் கோவைக்கு அனுப்பி வைத்தார். இதன் மதிப்பு ரூ. 10 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

    அதன் பின்னர் ரயாஸ் பணத்தை கேட்டார். ஆனால் கோவையை சேர்ந்த கும்பல் பணம் கொடுக்கவில்லை. பணம் கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது குறித்து ரயாஸ் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரயாசுக்கு பணம் கொடுக்காமல் மிரட்டியதாக கோவை பாப்பநாயக்கன் பாளையம் கோபி (36), விமல் (27), சாய்பாபா காலனி சிவராஜ் (41), கிராஸ்கட் ரோடு மகேஷ் (41), சஞ்சய் (43) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×