search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் சூறை காற்றுடன் மழை - கோழிப்பண்ணை இடிந்தது
    X

    ஈரோடு மாவட்டத்தில் சூறை காற்றுடன் மழை - கோழிப்பண்ணை இடிந்தது

    ஈரோடு மாவட்டத்தில் சூறாவளி காற்று மற்றும் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், கறிகோழிப் பண்ணை இடிந்து விழுந்ததில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தது.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் சுற்றியுள்ள பொலவக்காளிபாளையம், குள்ளம்பாளையம், மொடச்சூர், வெள்ளாங் கோயில், சிறுவலூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் சூறாவளி காற்று, மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதனால் கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன் பாளையத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் அமைந்திருந்த 230 அடி நீளமுள்ள கறிகோழிப் பண்ணை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் வளர்க்கப்பட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிகோழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழந்தது.

    இதே பகுதியில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தோட்டங்களில் பட்டுப்புழு வளர்ப்புக்காக விவசாயிகள் அமைந்திருந்த கொட்டகைகளின் மேற்கூரைகள் சூறாவளி காற்றினால் பறந்து பலந்த சேதம் அடைந்தது.

    கடுக்காம் பாளையம், பொம்ம நாயக்கன் பாளையம், ஒத்தக்குதிரை, கூகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    பொலவ்வாளி பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளி கட்டிடத்தின் மீது அருகில் இருந்த மரங்கள் விழுந்ததில் கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

    மேலும் சூறாவளி காற்றால் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மரங்கள் சாய்ந்ததால் மின் கம்பங்கள் உடைந்து மின்கம்பிகள் அறுந்துள்ளதால் குள்ளம்பாளையம், பொலவக்காளிபாளையம் தாசம்பாளையம், ஒத்தக்குதிரை உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.1 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×