search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓமலூர், சங்ககிரியில் இடி-மின்னலுடன் மழை
    X

    ஓமலூர், சங்ககிரியில் இடி-மின்னலுடன் மழை

    சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், சங்ககிரியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அக்னி வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    இந்த நிலையில் சேலம் புறநகர் மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை 7 மணி வரை இடி-மின்னலுடன் நீடித்தது. இதில் ஓமலூர், சங்ககிரி, வீரகனூர், ஆத்தூர் உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடிந்தது. ஆனால் சேலத்தில் தூரலுடன் மழை நின்றதால் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஓமலூரில் அதிகபட்சமாக 19.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சங்ககிரியில் 17.4, வீரகனூர் 16, ஆத்தூர் 12.4, தம்மம்பட்டி 7.2, எடப்பாடி 7, ஆனைமடுவில் 6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 85.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது.

    ஏற்காட்டில் நேற்று மாலை அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து அங்கு ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் கடைகளில் வியாபாரம் களை கட்டியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×