search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் ஆய்வு கூட்டம்
    X

    அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் ஆய்வு கூட்டம்

    தேனாம்பேட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் ஆய்வு கூட்டம் 2 நாள் நடைபெற்றது.
    சென்னை:

    தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்களுடனான 2 நாள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தாய்சேய் நலம், தொற்றா நோய் தடுப்பு கண்டறிதல் சிகிச்சை திட்டம் தடுப்பூசி, டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம், பள்ளி சிறார் நலத்திட்டம், அம்மா ஆரோக்கிய திட்டம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி தாய்மார்களின் சிகிச்சை விவரம் நடமாடும் மருத்துவ வாகனங்களில் கர்ப்பிணி தாய்மார்களின் சிகிச்சை விவரம், நடமாடும் மருத்துவ வாகனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்ட விவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு துணை இயக்குநர்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இன்பசேகரன் மற்றும் மருத்துவ உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×