search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூந்தமல்லியில் என்ஜினீயரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு
    X

    பூந்தமல்லியில் என்ஜினீயரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு

    பூந்தமல்லியில் என்ஜினீயரை கத்தியால் குத்தி செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    ஸ்ரீபெரும்புதூரில் வசித்து வருபவர் ராம்குமார். என்ஜினீயர். இவர் பூந்தமல்லி, பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு அவர் பணிக்காக பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து பைபாஸ் சாலையில் நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் அவரை வழி மறித்து பணம், செல்போனை கேட்டு மிரட்டினர்.

    ஆனால் ராம்குமார் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் கத்தியால் ராம்குமாரை சரமாரியாக குத்தினர். பின்னர் அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்று விட்டனர்.

    அவ்வழியே சென்ற ராம்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராம்குமாரின் சொந்த ஊர் நாகப்பட்டினம் அருகே உள்ள மருகூர் ஆகும்.

    மாமல்லபுரத்தை அடுத்த சாலவான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சீதா. வடநெம்மேலி அருகே உள்ள தெற்குபட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்ப அங்குள்ள கிழக்கு கடற்கரை சாலை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது மர்ம வாலிபர் அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற அவனை அக்கம் பக்கத்தினர் மடக்கி பிடித்து மாமல்லபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் கூடுவாஞ்சேரியை அடுத்த அய்யஞ்சேரியை சேர்ந்த யுவராஜ் என்பதும் இவன் மீது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளிட்ட பல போலீஸ் நிலைங்களில் ஜெயின் பறிப்பு புகார்கள் இருப்பதும் தெரிய வந்தது மாமல்லபுரம் போலீசார் யுவராஜை கைது செய்து திருக்கழுகுன்றம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். #tamilnews

    Next Story
    ×